டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பர். அவருக்கு உதவிட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இந்தியத் தலைமை ஆணையர் மற்றும் பிற இரண்டு ஆணையர்களையும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 அகவை (வயது) நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோ அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.

இந்த நிலையில், தேர்தல் ஆணைய டில்லியில், புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக்கொண்டார். 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஒருவர் ஏற்கனவே ஓய்வுபெற்ற நிலையில், புதிய தேர்தல் ஆணையராக  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.   அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தோ்தல் ஆணைய குழுவில் இடம்பெறவாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னா், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பாா். பின்னா், 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவாா்.