சென்னை:

மிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, போட்டியின்றி தேர்வான  பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா  குருநாத், இன்று தலைவராக பதவி ஏற்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவரும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவருமான சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல போட்டியிட்ட  துணைத் தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் போட்யின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத் துக்கு வந்து ரூபா குருநாத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து துணைத் தலைவர்கள் மற்றும் பொருளார் உள்பட நிர்வாகிகளும் பொறுப்பேற்றனர்.

கோல்ஃப் வீராங்கனையான ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.