திருப்பூர்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் காலமானார். 2016 முதல் திருப்பூர் தெற்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார் குணசேகரன். அரவது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குணசேகரன்,  மாநில அம்மா பேரவை இணைச்செயலாளராக செயல்பட்டு வந்த, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில், குணசேகரன் இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.