பெங்களூரு:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “காவிரி பிரச்சனையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நதிநீர் பங்கீட்டுக்கு ஒரு அமைப்பை அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.