சென்னை:  தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி, நாமக்கல் கவிஞர் மாளிகை வளாகத்தின் முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரக்கன்றினை நட்டார்.

தமிழ்நாட்டில் மார்ச் 10ந்தேதி முதல் 12ந்தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலகள் 3 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. 10ந்தேதி மற்றும் 11ந்தேதி ஆ மாநாடு நடைபெற்று முடிவடைந்த நிலையில் 3வது நாள் மாநாடு நடைபெற்று வருகிறது.

இன்றைய மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில், வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச் சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது என கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி,  தலைமைச்செயலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  மரக்கன்று ஒன்று நட்டினார்.