மதுரை,
நீர் வரத்து சீராக இருப்பதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில், மதுரை பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது கும்பகரை. பெரிய குளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, இயற்கைச் சூழலிலுள்ள உள்ளது.
இந்தியாவில் சுற்றுலாத்துறைகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கின்றது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியிய்ல உள்ள அருவி, கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது.
அருவியில் அதிக நீர் வரத்து இருந்ததால் குளிக்க கடந்த ஏப்ரல் 24ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் நீக்கி உள்ளனர்.
இதனால் கோடை சுற்றுலாவாக வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.