ஸ்ரீநகர்:  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை, வளர்ச்சி பணிகள் குறித்து உலக நாடுகளைச் சேர்ந்த 24 தூதரர்கள் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அவர்களின் ஆய்வுகள் முடிந்த நிலையில்,  அங்கு முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

மலேசியா, வங்கதேசம், செனகல், தஜகிஸ்தான், பிரேஸில், இத்தாலி, ஃபின்லாந்து, கியூபா, சிலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஸ்வீடன், கிர்கிஸ்தான், அயர்லாந்து, கானா, எஸ்டோனியா, பொலிவியா, மலாவி, எரித்ரியா  உள்பட ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த நாடுகளின்  24 தூதா்கள் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பணிகள் குறித்து 3 நாள் ஆய்வு செய்வதற்காக கடந்த  புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்தனர்.

அண்மையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில்  தேர்தலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினர்.   தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள், யூனியன் பிரதேசத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் உள்பட பலரை சந்தித்து பேசினர்.

2வது நாளான நேற்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை சந்தித்து பேசினர். அதைததொடர்ந்து,  தால் ஏரி, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிடும் அவர்கள், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவையும் சந்தித்துப் பேசினர்.

அதைத்தொடர்ந்து இன்று 24 தூதர்கள் கூட்டம் நடைபெற்றது.  ஐரோப்பிய ஒன்றிய தூதரைத் தவிர, பெல்ஜியம், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய தூதர்கள் இந்த குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். வங்காள தேசம் , பிரேசில், சிலி, கியூபா, கானா, கிர்கிஸ் குடியரசு மற்றும் மலேசியா போன்ற பல்வேறுநாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள தூதர்கள் மற்றொரு பகுதியாக இருந்தனர்.

அவர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய ஆய்வுகள் குறித்து விவாத்தினர். அப்போது,  சில தூதர்கள் , ஒரு விரிவான மதிப்பீட்டைச் செய்வதற்கு 3 நாட்கள் மிகவும் குறைவானது இருப்பினும் நிலைமையில் ஒப்பீட்டளவில் முன்னேற்றம் இருப்பதற்கான அறிகுறிகள் என்று கூறியவதாகவும், தாங்கள் சந்தித்த அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களில் பெரும்பாலோர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக்குபின்  செய்தியாளர்களிடம் கூறிய தூதர்கள், ஜம்மு-காஷ்மீரில் மேலும் வளர்ச்சியை எட்ட, சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என கூறினர்.

வெளிநாட்டு தூதர்களின் ஆய்வுகளால்,  உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை உயர்த்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,  மத்திய அரசின் இந்த நடவடிக்கை எந்தவிதப் பலனையும் தராது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.