டில்லி

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவானதை ஒட்டி அவர் பெயர் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

உலகப் பணக்காரர் பட்டியலை வருடா வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது.   கடந்த 2017 ஆம் ஆண்டின் உலகப் பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் நிரவ் மோடி இடம் பெற்றிருந்தார்.  அவருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1.8 பில்லியன் சொத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வருடம் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது.   வங்கி ஊழலின் காரணமாக அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூரப்படுகிறது.    நீரவ் மோடி உட்பட மொத்தம் 4 பேரின் பெயர் நீக்கப் பட்டுள்ளது.    இந்த வருடத்திய பட்டியலில் சென்ற ஆண்டை விட 18 இந்தியப் பணக்காரர்கள் இடம் பெற்று மொத்தம் 119 இந்தியப் பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர்.