’’சச்சின் பைலட் ஒன்றரை ஆண்டுகளாக  என்னோடு பேசுவது இல்லை’’—அசோக் கெலாட்

ஒரே கட்சியைச் சேர்ந்த முதல்- அமைச்சரும் துணை முதல்-அமைச்சரும் ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு பேச்சு வார்த்தை இல்லாமல் ,ஆட்சியை நடத்தி இருப்பது அபூர்வம் என்றாலும் ,அது உண்மை.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.

அந்த மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உருவாகி சச்சின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் விலக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அசோக் கெலாட் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்’’  சச்சின் பைலட்டுக்கும், எனக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது’’ என்று அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.

‘’முதல்-அமைச்சருடன் ஒரு அமைச்சர் பேசுவது இல்லை. முதல்-அமைச்சரின் அறிவுரையைக் கேட்பதில்லை. ஜனநாயக தேசத்தில் எதிர்க்கட்சியினர் கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். ஜனநாயகத்தின்  அழகே பேச்சுவார்த்தை தான்’’என்று அங்கலாய்த்துள்ளார் அசோக் கெலாட்.

– பா.பாரதி