சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சி பிப்ரவரி மாத மாத மாமன்ற கூட்டம் நேற்று (பிப்ரவரி 28ந்தேதி) கூடியது. இதில், முதல் முறையாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கி நடத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய மேயர் பிரியா, அடுத்த மாமன்றக் கூட்டம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய கூட்டத்தில், மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தொடங்கப்பட்டது
நேற்று (பிப்.28) நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து தொடங்கப்பட்டது. நூற்றாண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. இதனைத் தொடர்ந்து 122வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசு மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மாமன்றக் கூட்டம் மார்ச் 2ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.