சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக அதிமுக தலைமை, கும்பல் கும்பலாக வேட்பாளர்களை அமரவைத்து நேர்காணல் நடத்தி உள்ளது. இதை அதிமுகவினரே விமர்சித்துள்ளனர்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த சில நாட்களாக விருப்பமனு கடந்த சில நாட்களாக விருப்பமனு பெறப்பட்டது. கடைசி நாளான நேற்று மட்டும் ஏராளமானோர் விருப்பமனு அளித்தனர். மொத்தம் 7,967 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
234 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்த 7,967 பேரிடமும் இன்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை காலை 9 மணி முதல் அதிமுக தலைமை கழக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.
முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவை தலைவர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். பல தொகுதிகளைக் சேர்ந்தவர்களை கும்பல் கும்பலமாக அமரவைத்து நேர்காணலை நடத்தி வருகின்றனர்.
காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலான சுமார் 4 மணி நேரத்தில், 139 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நேர்காணல் செய்து முடித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற நேர்காணல் இதுவரை இந்தியாவில் எந்தவொரு கட்சியும் நடத்திராத நிலையில், அதிமுக தலைமை புதுமையான முறையில் நேர்காணலை நடத்தி வருவது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையிலேயே அதிமுகவின் நேர்காணல் வரலாற்று சாதனைதான்…