கடந்த 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படாத நாடு எது தெரியுமா?

Must read

வெலிங்டன்

நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை.

அகில உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.98 கோடியைத் தாண்டி உள்ளது.  இதுவரை சுமார் 7.3 லட்சம் பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.  பல வலிய மற்றும் சுகாதார கட்டமைப்பு மிகுதியான நாடுகளும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை.   இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

இந்நிலையில் நியுசிலாந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.  தற்போது இங்கு படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளது.  கடந்த 100 நாட்களாக நியூசிலாந்து மக்களில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. என இந்நாடு அரசு அறிவித்துள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து நியுசிலாந்துக்கு வந்த 23 பேருக்கு மட்டுமே கொரோனா உள்ளது.  இவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.    கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்த போதிலும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

More articles

Latest article