சென்னை
நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது பலரும் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். மேலும் நகர் முழுவதிலும் மெட்ரோ ரயில் இயக்கத் தேவையான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,
”சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த நவம்பர் மாத்தில் மட்டும் 80 லட்சத்து ஆயிரத்து 210 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 35 ஆயிரத்து 677 பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட் போன்ற பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, நாளை (3-ந்தேதி) ஒரு நாள் மட்டும் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்யலாம்.பயணிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணம் வழங்கப்படுகிறது”
என்று அறிவித்துள்ளது.