ஜனநாயகமே இல்லாத உச்சநீதிமன்றம் :  நீதிபதிகள் குற்றச்சாட்டு

Must read

டில்லி

ச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இன்று முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுவரை செய்தியாளர் சந்திப்பை இதுவரை நிகழ்த்தியது கிடையாது.    வரலாற்றில் முதல்முறையாக இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப்,  மதன் லோகூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.  அப்போது பல குற்றச்சாட்டுகளை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள், “உச்சநீதிமன்றம் சரியாக செயல் படுவதில்லை.   கடந்த சில மாதங்களாகவே இங்கு நடக்கும் எந்த நிகழ்வும் ஏற்புடையதாக இல்லை.   இது போல் நீதித் துறையில் குளறுபடிகள் நடந்தால் ஜனநாயகம் நிலைக்காது.   நாங்கள் இந்த உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் யாவும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.   இதை மக்களுக்கு தெரிவிக்கவே நாங்கள் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்துகிறோம்.

பல விஷயங்கள் நீதித்துறையில் முறையாக பின்பற்றுவது கிடையாது.   விரும்பத்தகாத பல நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நிகழ்கின்றன.   நாங்கள் ஏற்கனவே தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் இது பற்றி எங்கள் கவலைகளைக் கூறி உள்ளோம்.   ஆனால் தீபக் மிஸ்ரா எங்களுக்கு பதிலளிக்காமல் எங்களை உதாசீனப் படுத்தி உள்ளார்.   அதனால் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது பற்றி நாடு சிந்திக்க வேண்டும்.” எனக் கூறினார்கள்.

நீதிபதிகளின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

More articles

Latest article