அடுக்கு மாடி குடியிருப்பு பராமரிப்பு கட்டணம் ரூ.7500 ஐ தாண்டினால் முழுத் தொகைக்கும் 18% ஜிஎஸ்டி

Must read

சென்னை

அடுக்கு மாடி குடியிருப்புக்களின் மொத்த பராமரிப்பு கட்டணம்  ரூ.7500 க்கு மேம்பட்டால்  18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட உள்ளது.

தற்போது பெருநகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அதிகரித்து வருகின்றன.  இந்த குடியிருப்பு வாசிகள் ஒரு சங்கம் அமைத்து பராமரிப்பு கட்டணம் வசூலித்து பராமரிப்பு செலவுகளைக் கவனித்து வருகின்றனர்.   இதற்கு ரூ. 5000 க்கு மேல் செலுத்தும் போது 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த தொகை ரூ.7500 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டிவிஎச் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி சங்கத்தினருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.   அந்த குடியிருப்பில் 9 பிளாக்குகளில் 448 குடியிருப்புக்கள் அமைந்துள்ளது.   இங்கு பராமரிப்புக் கட்டணம் சதுர அடிக்கு ரூ.3.50 வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒவ்வொரு குடியிருப்பும் ரூ. 8000 பராமரிப்பு கட்டணமாக செலுத்தி வருகிறது.  அதனால் சங்கம் இனி ரூ.8000ல் குறைந்த பட்சம் ரூ.7500 போக மீதியான ரூ.500க்கு மட்டும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதும் என கூறி அதற்கு அனுமதி கோரி இருந்தது.   இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு சட்ட அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.7500 க்கு மேல் செலுத்தும் போது முழுத் தொகைக்கும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இதற்கு பல வரி ஆர்வலர்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.  இது தவறானது எனவும் குறைந்த பட்சத் தொகைக்கு மேல் உள்ள தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதே சரியான முறை என அவர்கள் கூறி உள்ளனர்.

More articles

Latest article