கடன் தொல்லையா?

Must read

கடன் தொல்லையா? செவ்வாயை வழிபடுங்க!
கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்கள் படும் கஷ்டத்தை ராவணனுக்கு உவமையாகச் சொல்கிறார் கம்பர். கடன் காலைச் சுற்றிய பாம்பு போல என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம்.
sevvay
ஆனால், நவக்கிரகங்களில் அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை வணங்கினால் கடன் பிரச்னை விரைவில் தீரும் என்கிறது கந்தபுராணம். அங்காரக ஸ்தோத்திரமாக 12 ஸ்லோகம் இதில் உள்ளது. ஓம் வீர த்வஜாய வித்மஹேவிக்ன ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம ப்ரசோதயாத் என்னும் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜெபிப்பதால் கடன் பிரச்னை தீரும்.
செவ்வாய்க்குரிய தெய்வங்களான முருகனுக்குரிய கந்தகுரு கவசம், சஷ்டி கவசம், நரசிம்மருக்குரிய ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் படிப்பதும் கடன்தீர வழி வகுக்கும். கிருஷ்ணரை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை விரைவில் தீரும் என்பர்.
Source: http://kovilkal.com/

More articles

Latest article