சென்னை: கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த மருத்துவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அந்த மருத்துவர்கள் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை பதிவு செய்துள்ள முதல்தகவல் அறிக்கையில், முதலில்,. சந்தேக மரணம் என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது, மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்படுவர்கள் என தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், பிரியாவுக்கு அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்ளான பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகியோரின் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்களது மனுவில், தாங்கள் பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வர உள்ளது.