மொராக்கோ கால்பந்தாட்ட வீரர் அக்ராஃப் ஹக்கிமியிடம் இருந்து விவாகரத்து கேட்டதுடன், ஜீவனாம்சமாக அவரது சொத்தில் பாதியை கேட்டுள்ளார் அவரது மனைவி ஹிபா அபௌக்.

மாடல் அழகியும் நடிகையுமான ஹிபா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஹக்கிமி பெயரில் எந்த சொத்தும் இல்லையென்று தெரியவந்துள்ளது.

ஹக்கிமி தனக்கு கிடைத்த வருமானத்தில் 80 சதவீதம் அதாவது 3200 கோடி ரூபாய்க்கு தனது தாயார் பெயரில் சொத்துக்களாக வாங்கியுள்ளார்.

ஹக்கிமி பெயரில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத நிலையில் தனது மொத்த சொத்துக்களையும் ஜீவனாம்சமாக கொடுப்பதாக அவர் உறுதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கின்போதே ஹிபாவிற்கு உண்மை தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஹக்கிமி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு பெண் கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில் அது தொடர்பான வழக்கும் இவர்மீது நடைபெற்று வருகிறது.