சேலம்:
சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் சிக்கன், பிரியாணியுடன் நுழைய முயன்ற உணவு டெலிவரி பாய் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சத்துமிகுந்த சைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதை ஏற்க விரும்பதாக சில  இஸ்லாமி யர்கள், அசைவ உணவு வேண்டும் என வலியுறுத்தி  அவ்வப்போது பல மருத்துவமனைகிளல் பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு காரணமாக, அங்குள்ள கொரோனா வார்டில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர், போன் மூலம் ஆன்லைனில்  சிக்கன் கறி, பிரியாணி, தந்துரி சிக்கன் உள்பட அசைவ உணவுகளை உணவு டெலிவரி நிறுவனம் மூலம் ஆர்டர் செய்துள்ளனர்.
அவர்கள் கொரோனா நோயாளிகள் என்பது தெரியாமல் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு உணவு டெலிவரி பாய் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  உணவை எடுத்து வந்த டெலிவரி பாய், மருத்துவ மனைக்குள் புகுந்து கொரோனா வார்டை நோக்கி வந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்களும், செவிலியர்களும் அவரை மடக்கி, இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, ​​  கொரோனா நோயாளிகள் 4 பேர் சேர்ந்து, அசைவ உணவை ஆர்டர் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, உணவு டெலிவரி பாயை எச்சரித்து அனுப்பிய மருத்துவர்கள், நோயாளிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது,  குறிப்பிட்ட 4 பேர் தந்தூரி சிக்கன் மற்றும் பிரியாணியை ஆர்டர் செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அவர்களுக்கு அறிவுரை கூறிய மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் வரை அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம்  புரதச்சத்து நிறைந்த சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.
இந்த சம்பவத்தினால் சேலம் மருத்துவமனையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.