ஈரோடு:
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் (INRLF) சார்பில் உணவுப்பொட்டலங்களும், முகக்கவசமும் வழங்கப்பட்டது.
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டஉள்ளன. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உள்பட அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பிலும் பல்வேறு மாவட்டங்களில் உதவி கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐஎன்ஆர்எல்எஃப் தலைவர் வாழப்பாடி கர்ணன், தேசிய பொதுச்செய லாளர் வாழப்பாடி இராம சுகந்தன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், ஐஎன்ஆர்எல்எஃப் மாவட்ட நிர்வாகிகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உணவுப்பொட்டலம், முகக்கவசம் போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
அதன்படி, இன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், காவல்துறை நண்பர்களுக்கு கிராம தொழிலாளர் சம்மேளனம் மற்றும் களம்பூர்தேவி கேஸ் ஏஜென்சி சார்பாக ஒருநாள் உணவு பொட்டலத்தை காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் முனிரத்தினம் வழங்கினார்.
சேத்துப்பட்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் காவல்துறையினருக்கு கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஒருநாள் உணவு பொட்டலத்தை காங்கிரஸ் மாநிலத் தலைவர் முனி ரத்தினம் வழங்கினார்.