ஈரோடு:

ரோடு மாவட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் (INRLF) சார்பில், ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொட்டலங்களும், காவலர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் உள்பட நாடு முழுவதும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில், இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனத்  தலைவர் வாழப்பாடி கர்ணன், தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் ஆகியோர்  அறிவுறுத்தலின்பேரில், ஐஎன்ஆர்எல்எஃப் மாவட்ட நிர்வாகிகள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள  தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள்,  ஏழை, எளியோர் மற்றும் இரவு பகல் பாராது பணியாற்றி வரும் காவல் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு உதவிடவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும்  உணவுப்பொட்டலமும், முகக்கவசமும் வழங்கி வருகின்றனர்.

அதன்படி, இன்று மதியம்  ஈரோடு மாவட்ட ஐஎன்ஆர்எல்எஃப் தலைவர் தங்கராஜ் தலைமையில், ஈரோடு மாவட்டம், அரச்சசலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்பொட்டலம் முகக்கவசம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ,ஈரோடுமாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், கொங்குடையாம் பாளையம் ஊராட்சி தூய்மைபணியாளர்களுக்கு ஈரோடு மாவட்ட ஐஎன்ஆர்எல்எஃப் தலைவர் தங்கராஜ்  மதிய உணவு மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

பின்னர்,  ஈரோடு-பழனி நெடுஞ்சாலையில் ஈரோடு -திருப்பூர் மாவட்ட எல்லையான பழையகோட்டை பாலம் அருகேஉள்ள சோதனை சாவடியில் உள்ள காவலர்களுக்கும் ஈரோடு மாவட்ட ஐஎன்ஆர்எல்எஃப் தலைவர் தங்கராஜ்  மதிய உணவு மற்றும் முகக்கவசம். வழங்கினார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, ஊராட்சிதலைவர் C.K.பொன்னுச்சாமி முன்னிலையில், ஈரோடு மாவட்ட ஐஎன்ஆர்எல்எஃப் தலைவர் தங்கராஜ்  மதிய உணவு மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

தொடர்ந்து, ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான குப்புச்சிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுவலசு-மருதுறை சாலையில் உள்ள சோதனைசாவடியில் உள்ளகாவலர்களுக்கும், அந்தப்பகுதி ஊராட்சிதலைவர் தலைமையில், ஐஎன்ஆர்எல்எஃப் தலைவர் தங்கராஜ்  மதியஉணவு மற்றும் முகக்கவசம் வழங்கினார்.