சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்க உள்ள தமிழக அரசு கொரோனா தொற்று நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், திமுக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மு.க.ஸ்டாலின் மகனான உதய நிதி ஸ்டாலின்,. திருக்குவளையில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசியல் மற்றும் மதக்கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
உதயநிதி ஸ்டாலினுடன் 5 கார்களுக்கு மேல் செல்லக் கூடாது, 50 பேருக்கு மேல் சேரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பாஜக தொடங்கிய வேல்யாத்திரையில் கூட்டம்கூடிய நிலையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, அரசியல் மற்றும் மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு தமிழகஅரசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு தமிழகஅரசு கெடுபிடி செய்து வருகிறது.