கொரோனா எதிரொலி – சி.ஏ. தேர்வுகளும் ஒத்திவைப்பு

Must read

புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கொரோனா பரவல் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், வரும் மே மாதம் 21ஆம் தேதி நடைபெற இருந்த எழுத்து தேர்வு மற்றும் மே 22ஆம் தேதி நடைபெற இருந்த இடைநிலைத் தேர்வு ஆகிய 2 தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டும் உள்ள நிலையில் தற்போது ஐஏஎஸ் மற்றும் சிஏ போன்ற முக்கிய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More articles

Latest article