அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனை எதிர்த்து மாணாக்கர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரிக்கப்படுடு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, அண்ணா பல்கலைக்கழகத்தை கடுமையாக சாடிய நீதிபதி, கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தபடிப்புகளை பாழக்குகிறது என குற்றம் சாட்டினார்.
இநத் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்? இந்த படிப்பை பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும், அடுத்த ஆண்டு மத்திய அரசு இட ஒதுக்கீட்டையும் பின்பற்றலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
இந்த ஆண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் நிலையில், இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டால் அது பல்கலைக்கழகத்திற்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 18-ம் தேதி அனைத்து தரப்பினரும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.