ஃபுளோரிடாவில் 50 பேரைக் கொன்றவன் " ஓமர் மதீன்"

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

flourida
ஃபுளோரிடாவில்  உள்ள ஒர்லாண்டோவில் உள்ள ஒரு பல்ஸ் கேளிக்கை விடுதியில் புகுந்த ஆயுதம் தாங்கிய ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க துப்பாக்கிச் சூடு வரலாற்றில் அதிகப்பட்சமாக 50 பேர் பலி, 59 பேர் காயமடைந்துள்ளனர்.
போர்ட் செயின்ட்  லூகியாவில் வசிக்கும் அமேரிக்க குடிமகன் ஓமர் மதீன் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை அவனது தீவிரவாத குழுக்களுடனான எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை.
 
மீட்புப்ப்டையினர் இரண்டு குண்டுவெடிப்புகளை நடத்தி குற்ற்வாளியின் கவனத்தை திசைத் திருப்பி மக்களை வெளியேற உதவி செய்தனர்.  பிறகு நேருக்கு நேராக குற்றவாளியுடன் துப்பாக்கிச் சண்டையிட்டு அவனைக் கொன்றதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். அங்கிருந்து 30 பிணையர்களை மீட்டனர்.

சமீப காலமாக, எந்த தீவிரவாத அமைப்புடன் சேராமலேயே, அவர்களால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் சார்பாக தாமாகவே முன்வந்து தாக்குதலில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த டிசம்பரில் இதேப் போன்று ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ரமலான் பண்டிகைச் செய்தியில் கூட இஸ்லாம் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். குழு இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட அழைப்புவிடுத்து இருந்தது.

தாக்குதல் நடத்தத் பட துவங்கிய உடன், பல்ஸ் நிர்வாகம் “அனைவரும் உடனே வெளியேருங்கள். ஓடுங்கள்”என அறிவிப்பை வெளியிட்டது.

அந்த விடுதியில்  லத்தின் சார்ந்த ஒரு விருந்து  நிகழ்ச்சி நடந்துக் கொண்டு இருந்தது. அது முடியும் தருவாயில் திடீரெனப் புகுந்த மர்ம மனிதன்  50 முறைக்கும் மேல் துப்பாக்கிச் சூடு நடத்த துவங்கினான். எங்குப் பார்த்தாலும் ரத்தம் மற்றும் துப்பாக்கிக் குண்டு சத்தம்.  நாங்கள் ஒரு வழியைக் கண்டுப் பிடித்து  தப்பித்தோம்” என அங்கிருந்து தப்பித்த ஒருவர் கூறினார்.
orlando 1
தாக்குதல் நடந்த மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஒர்லாண்டோ காவல்துறை பல்ஸ் கிளப்க்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய தீவிரவவாதியை சுட்டுக் கொன்றனர்.

ஒர்லாண்டோ காவல்துறை இந்தச் செயலை திவிரவாதச் செயல் என இனம் கண்டுள்ளது. உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதியா எனக் கண்டறியப் படவில்லை. இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில்  முகாமிட்டுள்ளனர்.
காணொளிக் காண்க: ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் தாக்குதலுக்குள்ளானவர்கள்
அமெரிக்காவில் 2015 ஆண்டில் மட்டும்   372 முறை பெரும் (நான்கு பேருக்கு மேல் கொல்லப்பட்ட) துப்பாக்கிச் சூடு சம்பவம்  நடத்தப்பட்டுள்ளது. 475 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1870 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்றி: பி.பி.சி., கார்டியன், நியூயார்க் டைம்ஸ்

More articles

Latest article