ஃபுலோரிடாவில் உள்ள ஒர்லாண்டோவில் உள்ள ஒரு பல்ஸ் கேளிக்கை விடுதியில் புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த விடுதியில் லத்தின் சார்ந்த ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்துக் கொண்டு இருந்தது. அது முடியும் தருவாயில் திடீரெனப் புகுந்த மர்ம மனிதன் 50 முறைக்கும் மேல் துப்பாக்கிச் சூடு நடத்த துவங்கினான். எங்குப் பார்த்தாலும் ரத்தம் மற்றும் துப்பாக்கிக் குண்டு சத்தம். நாங்கள் ஒரு வழியைக் கண்டுப் பிடித்து தப்பித்தோம்” என அங்கிருந்து தப்பித்த ஒருவர் கூறினார்.
தாக்குதல் நடந்த மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஒர்லாண்டோ காவல்துறை பல்ஸ் கிளப்க்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய தீவிரவவாதியை சுட்டுக் கொன்றனர்.
ஒர்லாண்டோ காவல்துறை இந்தச் செயலை திவிரவாதச் செயல் என இனம் கண்டுள்ளது. உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதியா எனக் கண்டறியப் படவில்லை. இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.
காணொளிக் காண்க: ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் தாக்குதலுக்குள்ளானவர்கள்
அமெரிக்காவில் 2015 ஆண்டில் மட்டும் 372 முறை பெரும் (நான்கு பேருக்கு மேல் கொல்லப்பட்ட) துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. 475 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1870 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்றி: பி.பி.சி., கார்டியன்