பெங்களூர்:
ர்நாடக மாநிலம் பெங்களுரில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவதால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது.
4-bank
ஜூன் மாதம் ஆரம்பமான மழை அவ்வப்போது பெய்கிறது. பெங்களூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக சிறிய அளவில் ஆரம்பான மழை தற்போது கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்க்கிறது. இடையில் சற்று இடைவெளி விட்டிருந்த மழை தற்போது மீண்டும் அடைமழையாக பொழிந்து வருகிறது.
இந்த விடாத மழையின் காரணமாக பெங்களூர் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். நகரை எங்கு நோக்கினும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
பெங்களூர், கோடிசிக்கனஹள்ளி, விஜயா வங்கி காலனி உள்பட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஒரேநாள் இரவில் சுமார் 38 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய அதிகரிகள் தெரிவித்தனர்.
1bank
பெங்களுர் மடிவாளா ஏரி நிரம்பியது.  ஏரி உடையாமல் இருந்த அதிலிருந்த உபரி நீர் வெளியேற்றப்பட்டது.  அந்த நீர் ஏரி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கோடிசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள  மற்றொரு ஏரியும் நிரம்பியதால் அதிலுள்ள உபரி நீரும் வெளியேற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டது.
2bank
இதனால் அங்குள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.  அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களும் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள்  தண்ணீரில் மூழ்கின.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை கர்நாடக அரசு மீட்பு படையினர் ரப்பர் படகுள் மூலம் மீட்டு வருகின்றனர்.  வீடுகளில் இருந்த தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் படகில் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
3bank
வெள்ள நீரி  சூழ்ந்ததால் அந்தப் பகுதியே தீவு போல் காட்சி அளிக்கிறது. வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்  இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று  பீதியை கிளப்பி உள்ளனர்.