தடை உத்தரவையும் மீறி டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்

Must read

டில்லி

கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மீறி உள்நாட்டு விமானங்கள் டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவுதல் அதிகமாகி வருகிறது.

இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டவரைத் தாக்கி உள்ள கொரோனா இதுவரை 9 பேரைப் பலி வாங்கி உள்ளது.

வெளிநாட்டினர் இந்தியா வருவதைத் தடுக்க அனைத்து சர்வதேச விமானங்களும் இந்தியாவில் தடை இறங்கச் சென்ற வாரம் தடை விதிக்கப்பட்டது.

நேற்று மத்திய அரசு அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டது.

மற்றும் அனைத்து ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள், மாநில பேருந்துகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு  இந்தியா முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான போக்குவரத்து தடையை மீறி உள்ளூர் விமானங்கள் டில்லி விமான நிலையத்தில் நேற்று இரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது புகைப்படமாக்கப்பட்டு பலராலும் சமூக வலை தளங்களில்  பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.

More articles

Latest article