டெல்லி:

வீட்டின் உரிமையாளர்கள் எங்களை காலி செய்ய வற்புறுத்துகிறார்கள் என்று எய்ம்ஸ் மருத்துவ மனையில் பணியாற்றும் ரெசிடென்டல் மருத்துவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு  கடிதம் எழுதி உள்ளனர். தங்களுக்கு உதவி செய்யும்படி வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் 30 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 7பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 23 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது மட்டுமின்றி, கடந்த 40 மணி நேரத்தில் டெல்லியில் புதிய கேஸ்  எதுவும் இல்லை என்று
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்து உள்ளார்.

இநத் நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையில்  பணியாற்றும் மருத்துவர்கள் பலர், அந்த பகுதியில், குறிப்பாக கவுதம் நகரில் குடியிருந்து வருகின்றனர்.

தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவர்கள் பணி முடிந்து குடியிருந்து வரும் வீடுகளுக்கு திரும்புவதால், அங்கு குடியிருந்து வரும் மற்ற குடித்தனக்காரர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் என்ற பீதியில், வீடுகளை காலி செய்ய வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், தங்களது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி, உள்துறை அமைச்சகத்துக்கு மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனுவை ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியன் அனுப்பி உள்ளது.

இந்த அமைப்பினர் ஏற்கனவே நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றை தடுக்கும்  தடுப்பு உபகரணங்கள்  அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கே கூட இல்லை என்று  குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது