டில்லி
சீனாவுக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானம் டில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று துபாயில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்குப் புறப்பட்டு சென்றது. விமானம் டில்லிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே இந்த விமானம் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த பயணிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டில்லியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.