சென்னை

சேலம் – சென்னை விமான சேவை ஏழு வருடம் கழித்து தொடங்கிய உடன் கட்டண விவகாரத்தால் சர்ச்சை உண்டாகி உள்ளது.

சேலம் விமான நிலையம் 7 வருடம் கழிந்து இன்று மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது.    முன்பு விமானக் கட்டணம் ரூ.3000 ஆக இருந்ததால் பொதுமக்கள் யாரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவில்லை.    அதனால் 7 வருடங்கள் மூடப்பட்டிருந்த இந்த விமான நிலையம் தற்போது கட்டணம் ரூ.1499 என குறைக்கப்பட்டு மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது.

ஆனால் தற்போது கட்டணத்தினால் முதல் நாளே சர்ச்சை உண்டாகி உள்ளது.   மொத்தம் பயணம் செய்யும் 72 பயணிகளில் முதல் 30 பயணிகளுக்கு மட்டுமே ரூ.1499 என அறிவிக்கப்பட்டுள்ளது.   மீதமுள்ள பயணிகளிடம் ரூ.2300 முதல் ரூ.2700 வரை பயணக் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.