கோவை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, இன்று கோவையில்,  கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் கொடியேற்ற முயன்றி பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  காவல்துறை  அனுமதியின்றி  பாஜகவினர் கூடியதாக அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக வறப்படகிறத. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பனையூரில் மாநிலதலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு  அமைக்கப்பட்ட 100 அடி உயர பாஜக கொடி கம்பத்தை காவல் துறையினர் அகற்றிய நிலையில், அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரம் கொடி கம்பம் நடத்தப்படும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதைத்தொர்ந்து மாநிலம் முழுவதும கொடிக்கம்பங்களை நட பாஜகவினர் திட்டமிட்டுள்ளர். சென்னையில் பாஜக கொடி கம்பம் நட மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், கோவையில் கொடிக்கம்பம் நட்டு கொடியேற்ற முயன்ற பாஜகவினரை காவல்துறை கைது செய்துள்ளது.

கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கூடிய பாஜகவினர், கொடியேற்றுவதாக கூறி புதிய கொடிக்கம்பத்தை நட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், புதிய கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.

இதனால் பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் கூடியதாக கூறி, மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி உட்பட 45 பாஜகவினரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.