சோமாலி கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட மாலுமிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு

Must read

1
நைரோபி:
ந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த 26 பேரை, சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 26 மாலுமிகள், சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்துச்செல்லப்பட்டனர். இவர்கள் சீனா, தைவான், வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனீஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பலவித முயற்சிகளுக்குப் பிறகு இப்போது அவர்களை, சோமாலிய கடற்கொள்ளையர்கள்  விடுவித்துள்ளனர்.
_92064182_27692edc-0a68-4ec3-821d-a2eae3f6558a
விடுவிக்கப்பட்ட மாலுமிகள் கென்ய தலைநகர் நைரோபிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவரான, பிலிப்பைன்ஸை சேர்ந்த அர்நெல் பால்பெரோ செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “பணயக்கைதிகளான எங்களை சோமாலிய கொள்ளையர்கள் விலங்குகளைவிட மிகக் கேவலமாக நடத்தினர். பெரும்பாலான நாட்கள் பட்டியில் தவித்தோம்.  உணவுக்காக எலிகளை வேட்டையாட வேண்டியிருந்தது” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட மாலுமிகள் விரைவில் அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று கென்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

More articles

Latest article