புதுடெல்லி:
புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.

பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர்.