டெல்லி: அதானி விவகாரத்தில் மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதை  கண்டித்து காங்கிரஸ் கட்சி  இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.

அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச்சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அதானி நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி தற்போது 21வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி., எஸ்பிஐ வங்கிகள் முதலீடு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்தியஅரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் முடக்கப்பட்டு வருகிறது.

இநத் நிலையில், எஅதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருவதாக குற்றம் சாட்டி உள்ள காங்கிரஸ் கட்சி,  இதை கண்டித்து இன்று (பிப்ரவரி 6ந்தேதி)  நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது.