டில்லி,

ஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு.

இன்றுமுதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ள நிலை யில், 5 வெவ்வேறு மதத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட பெஞ்ச் முத்தலாக் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்..

இஸ்லாமியர்களிடையே, மனைவியை பிடிக்காவிட்டால் வாய்மொழியாக மூன்று தடவை தலாக் கூறிவிட்டால் அவர்களுக்குள் விவாகரத்து உறுதியாகிவிடும். இவ்வாறு மூன்று முறை தலாக் சொல்வதே முத்தலாக் என அழைக்கப்படுகிறது.

இந்த நடைமுறை இஸ்லாமியர்களிடையே  காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த முத்தலாக் முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முத்தலாக் முறையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பலர் வழக்குகள் தொடர்ந்தனர்.

இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை ஐந்து வெவ்வேறு மதத்தை சேர்ந்த  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கின் விசாரணை இன்று முதல் (12ந்தேதி) முதல் நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் என்று அறிவித்திருந்தது.

இந்த வழக்கில்  மத வேறுபாட்டை தவிர்க்கும் வகையில்  ஐந்து வெவ்வேறு மத  நீதிபதிகள் விசாரணையை மேற்கொள்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி  எஸ்.கே. கெஹார் தலைமையிலான ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கிறது. வழக்கை விசாரித்து வரும்  நீதிபதி கேஹர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர், நீதிபதி குரியன் ஜோசப் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், நீதிபதி உதய் உமேஷ் லலித்  இந்து மதத்தை சேர்ந்தவர், நீதிபதி ரோஹிந்தன் ஃபலி நரிமன் இவர் பார்சி மதத்தை சேர்ந்தவர், நீதிபதி அப்துல் நசீர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.

இவர்கள் 5 பேர் கொண்ட பெஞ்சு தலாக் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்குக்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது தங்களது சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து   ஆல் இந்தியா முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியம் (AIMPLB) இது தவறானதாக இருந்தாலும் ஒரு திருமணத்தை முடிக்க ஒரு ‘செல்லத்தக்க’ வழி என்று நடைமுறையில் ஆதரிக்கிறது.

இதுகுறித்து,  கடந்த மாதம் லக்னோவில் நடைபெற்ற இஸ்லாமிய தனிநபர் சட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, AIMPLB தலைவர் மௌலானா ரபே கூறியிருந்தார்.

அப்போது, முஸ்லிம் மக்களுக்கு, அவர்களது  தனிப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த “முழுமையான அரசியலமைப்பு உரிமை” இருப்பதாகக் கூறினார்,

சமூகத்தை பொறுத்தவரையில் “அதை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் பாதுகாக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

 

இதற்கிடையில்,   பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த  25 தலைவர்களுடன் முத்தலாக் குறித்து  கலந்துரையாடினார். அப்போது முத்தலாக் தேவையற்றது என்றும், இந்த விஷயத்தில் இஸ்லாமியர்கள் சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விவாகரத்துச் செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் தற்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முத்தலாக் வழக்கை விசாரித்து வருகிறது.