கொழும்பு:

லங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி,  “அமைதியான வாழ்க்கைக்கு புத்தமதம் சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நரேந்திரமோடி,  புத்த மதத்தினர் கொண்டாடும் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றும் அடங்கிய ‘வெசாக்’ என்ற புத்த பூர்ணிமாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் இலங்கையில் நடக்கிறது.இதில் உலகம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நானூறு முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த புத்த பூர்ணிமா திருவிழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் சர்வதேச ‘வெசாக் தின’ கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களைச் சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இலங்கை செல்கிறேன். இரு நாடுகளின் வலுவான உறவுக்கு இது அடையாளம். “ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “அமைதியான வாழ்க்கைக்கு புத்தமதம் சிறந்த வழி” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.