கொச்சி

த்தாலியில் இருந்து வந்த ஐவருக்கு நடந்த சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவரும் அறிகுறி காணப்பட்டால் சோதனை செய்யப்படுகின்றனர்.

அவ்வகையில் உலகில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள இத்தாலியில் இருந்து கொச்சி வந்த ஐவர் சோதனை செய்யப்பட்டனர்.

இந்த ஐவரில் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மற்ற இருவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்த 75 மற்றும் 76 வயதான முதிய ஆண் மற்றும் பெண் ஆவார்கள்.

இவர்கள் ஐவருக்கும் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் நடந்த சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது.