ராமேஸ்வரம்,

மிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர்  22வயதேயான  பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது… அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இனிமேல் தமிழகத்தில்  இதுபோல ஒரு நிகழ்வு நடைபெறாத வகையில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும்… அதுவரை இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் எனவும் மறுத்து போராடி வருகின்றனர்.

 

 

பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் நேற்று மீனவர்கள் போராட்டம் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது…

போராட்டத்தின்போது,  ‘மீனவர் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைதுசெய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உறுதி தர வேண்டும்.’ என்று போராட்ட அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும்,  மேலும், இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.