சென்னை:

ஓகி புயல் காரணமாக பாதிக்கபட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில், சென்னை வாழ் குமரி மாவட்ட மீனவர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளாமான மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மீனவர்கள், ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் சரியான தகவல்களை தரவில்லை என்றும், இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை உடடினயாக கண்டுபிடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறி உள்ளனர்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.