சென்னை:
மிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்  4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 31ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தால், கொரோனா பரவல் குறையாததைத் தொடர்ந்து, மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும்  மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மீன்பிடி தடை காலமும் வந்தால்,  ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி வரையிலான 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.  இதையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31-ஆம் தேதி வரையும்,   மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31-ம் தேதி வரைக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தடை காலமும் 47 நாட்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, கிழக்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ந்தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.