சென்னை: முதலாண்டு பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 2ந்தேதி முதலாண்டு பொறியியல் படிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு சேர்க்கை முடிவடைந்து கலந்தாய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதலாண்டு கல்லுூரியில் சேர்வதற்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 2,53,954 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் பதிவுக் கட்டனம் செலுத்தியவர்களில்ன் எண்ணிக்கை 2,09,645. இதில் தகுதியுள்ள விண்ணப்பதார்களின் எண்ணிக்கை 1,99,868. இதில் அகாடமிக் பிரிவில் 1,97,601 மற்றும் தொழிற்கல்வியில் 2,267. விண்ணப்பித்தவர்களில் இருந்து 9,777 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தரவரிசை பட்டியலுக்கு எடுத்துகொள்ளப்பட்ட 1,99,868 விண்ணப்பங்களில் ஆண்கள் 1,12,731, பெண்கள் 87,134 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். இதில் விளையாட்டு பிரிவினர் 2,112 பேர், மாற்றுத்திறனாளர்கள் 408 பேர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,223 பேர் இடம்பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அரசு பள்ளி 7.5% இட ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கைக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 36,532. இதில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 32,223. இதில் ஆண்கள் 15,428 பேர், பெண்கள் 16,793 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் விளையாட்டு பிரிவினர் 271 பேர், மாற்றுத்திறனாளிகள் 105 பேர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 11 இடம்பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜூலை 10 அன்று தரவரிசை பட்டியல் வெளியான நிலையில் தொடர்ந்து கலந்தாய்வு பட்டியல் விவரும் வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பாண்டு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்முதுல் கட்ட கலந்தாய்வுஇ அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர் வாரிசு, விளையாட்டு வீரர்) ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 23 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.
அதைத்தொடர்ந்து, பொது பிரிவு – சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான (மாற்றுதிறனாளி, முன்னாள் படைவீரர் வாரிசு, விளையாட்டு வீரர்) ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து, பொறியியல் சேர்க்கைக்கான பொதுக்கல்வி, தொழிற்முறை கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு பொதுக் கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி (5 ஆண்டுகள்) பாடப்பிரிவுக்கான வகுப்புகளுக்கு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் செமஸ்டர் தேர்வு டிச.23ஆம் தேதியும், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதியும் நடைபெறும் என மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.