மே தினத்தில் இயக்கப்பட்ட ’தொழிலாளர்’ ரயில்..
விதி வலியது.
தொழிலாளர் தினத்தில் தான், தொழிலாளர்களுக்கு விடியல் பிறக்கும், என்று அவர்கள் தலையில் எழுதி வைத்திருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்?
அப்படித்தான் தொழிலாளர் தினமான நேற்று நடந்துள்ளது.
ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்த தொழிலாளர்கள், ரயிலில் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று,(மே ஒன்றாம் தேதி) முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மொத்தம் 6 ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன.
முதல் ரயில் ஐதராபாத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு நேற்று அதிகாலை 4.50 மணிக்கு ஆயிரத்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.
எஞ்சிய ஐந்து ரயில்கள் இவை:
*நாசிக்- பாட்னா
*ஆலுவா- புவனேஸ்வரம்
*நாசிக் –போபால்
* ஜெய்ப்பூர்-பாட்னா
* கோடா- கதியா
இந்த ரயில்களில் டிக்கெட் ஏதும் கிடையாது.
உரிய ஆவணங்களை வைத்துக்கொண்டு, மாநில அரசு அதிகாரிகள் கை காட்டும் தொழிலாளர்கள், இந்த ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டணத்தைச் சம்மந்தப்பட்ட மாநில அரசுகள், ரயில்வேக்கு செலுத்தும்.
ஒவ்வொரு ரயிலிலும் ஆயிரம் முதல் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
வரும் நாட்களில் இன்னும் சில நூறு ரயில்கள் இயக்கப்படும்.
– ஏழுமலை வெங்கடேசன்