கொச்சி

கேரளாவில் ஒரு மாணவிக்கு ஒரு ஆணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது

எர்ணாகுளத்தில் வசிக்கும் சச்சின் (வயது 20) என்னும் மாணவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மூளைச்சாவு அடைந்தார்.  அவரது குடும்பத்தினர் அவரது கை உட்பட பல உடல் உறுப்புக்களை தானமாக வழந்தினர்.

பூனேவை சேர்ந்த மாணவி ஸ்ரேயா (வயது 19) மங்களூருக்கு பேருந்தில் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளாகியது.  தலைகீழாக கவிழ்ந்த அந்த பேருந்தில் சிக்கிய ஸ்ரேயா தனது இரு கைகளையும் இழந்தார்.  கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சச்சினின் இருகைகளும் ஸ்ரேயாவுக்கு பொருத்தப்பட்டது.

அவரது நரம்புகள், தசைகள் ஆகியவற்றை பொருத்தி சுமார் 13 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.  தற்போது அவரது உடல் சச்சினின் கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.  பயிற்சிகளின் மூலம் ஸ்ரேயா இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் முழுமையாக இந்த கைகளை உபயோகிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் ஒரு பெண்ணுக்கு ஆணின் கைகள் பொருத்தப்பட்டது முதல் முறை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.