டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக பெயர் மற்றும் எண்ணுடன் சீருடை

Must read

ண்டன்

ங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் சீருடையின் முதுகுப் பகுதியில் பெயர் மற்றும் எண்கள் இடம் பெற உள்ளன.

ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஒவ்வொரு நாட்டின் சீருடையிலும் சட்டையின் பின் புறம் அந்த வீரரின் எண்ணும் பெயரும் அச்சடிக்கப்பட்டு இருப்பது வழக்கமாகும். ஆனால் இந்த முறை டெஸ்ட் போட்டிகளில் பின்பற்றப்பட்டது இல்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே ஆஷஸ் கிரிக்கெட் தொடர் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளில் கலந்துக் கொள்ளும் வீரர்களின் சீருடையில் சட்டையின் பின் புறத்தில் அந்த வீரரின் பெயர் மற்றும் அவருடைய எண் அச்சடிக்கப்பட உள்ளது. இந்த தகவலை இங்கிலாந்து நாட்டின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பின்னூட்டத்தில் வீரர்களின் சீருடையில் சட்டையின் பின்புறம் பெயர் இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் எண்கள் தேவை இல்லை எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article