சென்னை:

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமராக பதவி ஏற்றது முதல் பொதுவாக செய்தியாளர்களின் சந்திப்பை தவிர்த்து வரும் மோடி, தமிழகத்தில் முதன்முறையாக நாளை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நாளை  தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, ஐஐடியில் நாளை பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகள் காரணமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி போராட்டமும் நடைபெற உள்ளது. பிரதமர் வானில் பறந்து வந்தாலும் சரி சாலை மார்க்கமாக வந்தாலும் சரி கருப்பு கொடி காட்டியே தீருவோம் என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாது உள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.