சென்னை:

மிழகத்தில்  முதல்முறையாக  பெண் புரோகிதர் ஒருவர் திருமணத்தை மந்திரங்கள் ஓதி  சிறப்பாக  நடத்தி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெண் புரோகிதர் நடத்தி வைத்த திருமணம்

இந்து மதத்தில் பெண் தெய்வங்கள் அனைவராலும் வழிபடப்பட்டாலும், திருமணம் உள்ளிட்ட மத சடங்குகளை செய்ய  பெண்கள் புரோகிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்து மத சடங்குகளை பல நூற்றாண்டுகளாக ஆண்களே செய்து வருகின்றனர். ஆனால், பெண்கள் புரோகிதர்களாக இருக்கக்கூடாது என வேதங்களில் எந்தவித தகவலும் இல்லை என்றும்,  பெண் புரோகிதர்கள் இருந்ததாகவும்  விவேகானந்தர் கூறியிருப்பதாக புத்தகங்களில் தகவல்கள் உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக பெண் புரோகிதர் ஒருவர் திருமணத்தை வேத மந்திரங்கள் ஓதி சிறப்பாக நடத்தி வைத்துள்ளார். மைசூரைச் சேர்ந்த அந்த பெண் புரோகிதர், மணப்பெண்ணின் அழைப்பை ஏற்று,  இங்கு வந்து கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்..

தெலுங்குபெண்ணான சுஷ்மா ஹரினிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மணமகன் விக்னேஷ் ராகவன் காதல் தம்பதிகள், தங்களது திருமணத்தில் புதுமையை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையில், பெண் புரோகிதர், பெண் மிருதங்கம், மற்றும் நாதஸ்வரம் வாசிப்பாளர்களைக் கொண்டு திருமணம் நடத்த முடிவு செய்தனர். அவர்களின் ஆசைக்கு பெற்றோர்களும் ஒத்துழைக்க மைசூரைச் சேர்ந்த பெண் புரோகிதர் பிரமரம்ப மகேஸ்வரி  திருமணத்தை நடத்தி வைக்க ஒப்பந்தம் செய்யப்ப்டடார்.

விவேகானந்தர் கூறியிருப்பதாக புத்தகத்தில் வெளியாகியுள்ள  தகவல்

அதன்படி, சென்னையில் உள்ள தக்க்ஷிண் சித்ராவில் நேற்று திருமணம் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்திற்க வந்தவர்கள் வியப்பில் கண்ணை சிமிட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கையில், பெண் புரோகிதர் மந்திரங்களை ஓதி, அதை ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் செய்தும் திருமணத்தை இனிதே நடத்தி வைத்தார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஒரேஒரு குறைபாடு என்னவென்றால்,  மணமக்கள் எதிர்பார்த்தபடி பெண் நாதஸ்வரம், மிருதங்க  இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை….மற்றபடி திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்ததுள்ளது.

பெண் புரோகிதர் மந்திரங்கள் ஓதி திருமணம் செய்து வைப்பது தமிழ் நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது…

இதுகுறித்து கூறிய மணப்பெண்,  ”பெண் புரோகிதர்  நன்றாகவே சடங்குககளை செய்து திருமணத்தை நடத்தி வைத்தார், மணமகனும், மணமகளும் ஒவ்வொரு தனி மந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவர் ஆங்கிலத்தில் விளக்கினார், இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

இதுபோன்று திருமணம் மற்று பூஜைகளுக்கு பெண்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும்….

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு வெளியுறவுத்துறை பொறுப்பாளராக இருந்த  விஜய் சவுதவாலே நாக்பூரில்  தனது சகோதரருடைய மகனின் திருமணத்தை ஒரு பெண் புரோகிதரைக் கொண்டு நடத்தி வைத்தததாக தெரிவித்து உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நாக்பூரில் பெண் புரோகிதர் நடத்தி வைத்த திருமணம்

விஜய் சவுதவாலேவின் சகோதரரின் மகன் வினய் சஹஸ்ரபுத்தே மற்றும் நயனாவின் இந்தத் திருமணத்தை ஆஷேய் சஹஸ்ரபுத்தே என்ற பெண் புரோகிதராக இருந்து நடத்தி வைத்துள்ளார் . அது தொடர்பாக புகைப்படத்தையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாகவும், . இதன்மூலம் மத சடங்கின்போது பெண்கள் புரோகிதம் செய்வதில் மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. எந்த ஒரு மாற்றத்தையும் முதலில் நம் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பிறகு தற்போது தமிழகத்தில் முதன்முறையாக பெண் புரோகிதரைக் கொண்டு திருமணம் முடிக்கப்பட்டு உள்ளது.