தமிழ்த்திரை உலக வரலாற்றில் முதல் முறை:  தியேட்டர்களுக்கு செல்லாமல் குப்பையில் வீசப்பட்ட பாலா படம்…..

தமிழ்த்திரை உலக வரலாற்றில் முதல் முறையாக…  தியேட்டர்களுக்கு செல்லாமல்

குப்பையில் வீசப்பட்ட பாலா படம்…..

100 ஆண்டுகளை கடந்துள்ள தமிழ் சினிமா சரித்திரத்தில் ,முழுதாக எடுத்து முடிக்கப்பட்ட ஒரு திரைப்படம் – குப்பைக்கூடையில் வீசப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் ’டிராப்’செய்யப்பட் ட ‘வர்மா’ என்ற படத்தோடு பயணித்த ஆட்கள்  சாமான்யர்கள் இல்லை.

தேசிய விருது பெற்ற பாலா –இயக்குநர்.மலையாள சினிமாவின் வியாபாரத்தை தீர்மானிக்கும் ஈ-4 ‘என்டர்டெய்ன் மெண்ட்-‘தயாரிப்பு.விக்ரமின் மகன்-துருவ்-கதாநாயகன் என பலமான கூட்டணியில் உருவான படம் பரணில் கடாசப்பட்டிருப்பது கோடம்பாக்கத்தை தாண்டி மோலிவுட்,பாலிவுட் என அனைத்து ஏரியாக்களையும் அதிர வைத்துள்ளது.

வேரில் இருந்து விஷயத்தை தொடங்கலாம்.

தெலுங்கில் விஜய் தேவர கொண்டா நடித்து ,சந்தீப் வங்கா இயக்கிய படம்-அர்ஜுன் ரெட்டி.2017-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தெலுங்குமட்டுமல்லாது தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம்.

இந்த படத்தை ‘கபீர்சிங்’என்ற பெயரில் சந்தீப்பே இந்தியில்  இயக்கினார்.

அர்ஜுன் ரெட்டியை தமிழில் தயாரிக்கும் உரிமையை பெற்ற ஈ-4  நிறுவனம் பாலாவை இயக்குநராக ஒப்பந்தம் செய்தது.

கதாநாயகனாக விக்ரம் மகன் துருவையும், நாயகியாக வங்காள நடிகை மேகாவையும் வைத்து ‘வர்மா’வை  ஆரம்பித்தார்.

முதல் காப்பி  அடிப்படையில் படத்தை முடித்து தருமாறு ஒப்பந்தம் போடப்பட்டு- பாலாவுக்கு 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும்.சில நாட்களுக்கு முன்பு தான் தயாரிப்பாளரிடம் முழுப்படத்தையும் கொடுத்துள்ளார் –பாலா.

படத்தை பார்த்த தயாரிப்பாளர் அதிர்ந்து போனார்.

ஒரிஜினலில் இருந்த ஜீவன் –ரீ-மேக்கில் இல்லை.

சினிமா துறை பி.ஆர்.ஓ.-ஒருவர் நடந்த சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘’ஒரிஜினல் படம்- 3 மணி நேரம் ஓடக்கூடியது.வர்மா 2 மணி நேரம் தான். மூலப்படத்தில் இருந்த முக்கிய விஷயங்கள் வர்மாவில் இல்லை. துருவுக்கு சம்பளம் கிடையாது. நாயகிக்கும் கிட்டத்தட்ட அதுவே. பாலாவுக்கு கொழுத்த லாபம்.

படத்தை பார்த்த துருவ்-அப்பா விக்ரமிடம் கதறி விட்டார். ’’இந்த படம் வெளிவந்தால் எனது  எதிர்காலம் சூன்யமாகி விடும்..’’என குமுற –தயாரிப்பாளர் தரப்புடன்  விக்ரம் பேச்சு நடத்த- வர்மாவை முடக்குவது என்று முடிவானது.

அதே தயாரிப்பாளருக்கு- ஓசியில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் துருவ். தெலுங்கு ஒரிஜினல் படம்- வேறு ஒருவர்  டைரக்ஷ்னில் விரைவில் உருவாகும்.’’என்றார் அந்த பி.ஆர்.ஓ.நண்பர்.

முழுதும் முடிந்த ஒரு  திரைப்படம் –தியேட்டர்களுக்கு செல்லாமல் அடைக்கப்படுவது –இங்கே இதுவே முதல் முறை.

—பாப்பாங்குளம் பாரதி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bala's film, Bala's film thrown into the dustbin, Durav film, First time in Tamil film history, verma movie, vikram son movie, குப்பையில் பாலா படம், தமிழ்த்திரை உலக வரலாற்று, தியேட்டர்கள், துருவ் படம், பாலா படம், வரலாற்றில் முதன்முறை, விக்ரம் மகன் படம்
-=-