புனே
முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து இன்று அதிகாலை தொடங்கியது.
உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றை மக்களுக்குச் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.,
வரும் 16 ஆம் தேதி முதல் இந்தியாவிலும் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. இதற்கான பட்டியல் தயார் நிலையில் உள்ளன.
இந்த தடுப்பூசி வாங்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் உடன் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.
இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகளின் முதல் விநியோகம் புனேவில் இருந்து தொடங்கி உள்ளது. கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து லாரிகள் மூலம் புனே லோகேகாவ் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மொத்தம் 456 பெட்டிகளில் 14.592 டன் மருந்து முதல் கட்டமாக அளிக்கப்படுகின்றன.
அங்கிருந்து ஏர் இந்தியா விமான நிலையம் மூலம் மாநில நகரங்களுக்கு அளிக்கப்பட உள்ளன. புனேவில் இருந்து 14 விமானங்கள் இந்த தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல உள்ளன. இவை சென்னைக்கு 2, சண்டிகருக்கு 2, காந்திநகர், ஐதராபாத், விஜயவாடா, புவனேஸ்வர், கவுகாத்தி, பெங்களூரு, பாட்னா, லக்னோ ஆகிய நகரங்களுக்கு தலா 1 எனச் செல்ல உள்ளன.
[youtube https://www.youtube.com/watch?v=3x57w5kNIuM]