தேனி

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டு அமைந்துள்ளது.   இந்த அணை கேரள மாநிலத்துக்கு நீராதாரமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இன்று நண்பகலில் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியது.  இதனால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.